விளையாட்டுத்துறை அமைச்சை ஒப்படைக்குமாறு வலியுறுத்துகிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

விளையாட்டுத்துறை அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியுமென துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அண்மை காலங்களில் மிகவும் மோசமான பெறுபேறுகளை பெற்றுவரும் நிலைலேயே அர்ஜூன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அணியை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி 1996ஆம் முதல்முறையாக உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது அந்த அணியின் தலைவராக அர்ஜூன ரணதுங்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு