புதிய மைல்கல்லைத் தாண்டினார் குமார் தர்மசேன

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடி, தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவராக செயற்பட்டுவரும் குமார் தர்மசேன தனது போட்டி நடுவர் வாழ்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அதாவது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 150 போட்டிகளில் அவர் நடுவராக பணியாற்றியதன் மூலம் கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தர்மசேன 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 46 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக செயற்பட்டுள்ள நிலையில், 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 82 ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயற்பட்டுள்ள அதேவேளை, 22 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் குறிப்பிட்ட காலப் பகுதியில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

தர்மசேனவிற்கு முன்னர், இலங்கை அணி சார்பில் அசோக த சில்வா 150 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ள அதேவேளை, அதேபோல் 341 சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தானின் அலீம் டா, அதிகப்படியான சர்வதேச போட்டிகளில் நடுவராக செயற்பட்டவராக திகழ்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு