யாழில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபைக்குப் பின்பாக உள்ள பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து குடும்பஸ்தர் அரை உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும், யாழ். நாவலர் வீதி அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் (வயது 38) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

யாழ். நாவலர் வீதி அரியாலைப் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 04 பேர் சென்று குடும்பஸ்தரை கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட குடும்பஸ்தர் பண்டிக் கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அடித்துப் போட்ட நிலையில் அரை உயிருடன் கிடந்துள்ளார்.

கோவில் பகுதியால் சென்றவர்கள் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள். சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் குடும்பஸ்தரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு