தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் நேற்று யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களை மாலை 4.30 மணியளவில் யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தமைக்கு அமைவாக, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீரியல்வள உதவிப் பணிப்பாளர் து.சுதாகர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு