விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல்

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யக்கோரி, வடமாகாணத்தின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பி.டெனீஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பிரதிவாதிகளாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனக்கு கடிதமொன்றை அனுப்பிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக அறிவித்ததாக மனுதாரரான டெனீஸ்வரன் தெரிவித்துள்ளதுடன், பதவி நீக்குவதற்கு முன்னர் முதலமைச்சர் தனக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ள மனுதாரர், முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மனு தொடர்பான கருத்துக்களை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பான தீர்ப்பு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அறிவிக்கப்படுமென்று தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு