தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – முன்னாள் ஜனாதிபதி

இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும் என்பதால், தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திருக்கோவில், சாகாமம் கிராமத்தில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்விவைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தனக்கு சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் பாரிய பங்களிப்புகளை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒரு புதிய யாப்பு சீர்திருத்தத்தை வரைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதன் ஊடாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இன்று நாட்டில் பிரதான இரண்டு சிங்கள கட்சிகளுடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றுமையுடன் செயற்படுவதன் காரணமாக, புதிய யாப்பு சீர்திருத்தத்தை இலகுவாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு