உலக சுற்றுலா தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – முதலமைச்சர் (Video)

உலக சுற்றுலா தினத்தினை பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளுடன், பாரம்பரிய புறழ்வுகளை ஏற்படுத்தும் எமது கலாசார நிகழ்வுகள் நடாத்த தீர்மானித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினம் தொடர்பாக நேற்று (19) கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்த்திப்பின் போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஏதிர்வரும் 25 ஆம் திகதி உலக சுற்றுலா தினம். ஆன்றையதினம் வடமாகாணத்தில் சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், வடமாகாணத்தில் எத்தனையோ சுற்றுலா மையங்கள் அடையாளப்படுத்தப்படாது. நயினாதீவு மற்றும் தம்பகோளப்பட்டினம் கடல்படையினரால் அடையாப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். ஆவற்றினை மாற்றியமைப்பதற்காக சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் பிரதானமாக 1.வடமாகாண சுற்றுலாத் துறைக்கான தந்திரோபாயத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த திட்ட வரைவு என்னால் பரிசீலிக்கப்பட்டு குறுகிய காலத்திற்கு ஏற்புடையதாய் இருந்தாலும் நிலையான ஐந்து வருட அல்லது பத்து வருட முதன்மைத்திட்டம் (ஆயளவநச Pடயn) ஒன்று தயாரிக்கவுள்ளோம்.

2.சுற்றுலா சார் துண்டுப்பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அன்று மக்களிடயே விநியோகிக்கப்படும்.

3.போர்க்காலத்தில் வடமாகாண வரைபடம் உத்தியோகபூர்வமாகக் கிடையாதிருந்தது. அதனை உத்தியோகபூர்வமாகத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்பப்டுகின்றதுடன், சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

4.வடமாகாண சுற்றுலா வழிகாட்டி நூல்கள்சிலவற்றை தயாரித்து அன்றைய தினம் வெளியிடப்படும். இவற்றுக்கும் மேலாக சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலமாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வடபகுதியை நோக்கி வருவதற்கும் வடபகுதியில் காணப்படும் உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

அத்துடன், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் விருந்தோம்பல் முகாமைத்துவப் பாட நெறிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் அதே நேரத்தில் எமது மக்களின் கலாச்சார பிறழ்வுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். எமது பாரம்பரியம் மற்றும் கலைகள் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

மாட்டு வண்டில் சவாரிகள் நடைபவனியின் போதும், தவில், நாதஸ்வரம், பறை, தப்பு, சங்கு போன்றவற்றின் கூட்டிணைந்த இனியம் இசை நிகழ்ச்சிகளும், நாட்டுக்கூத்து, காவடி,சிலம்பம், பொம்மலாட்டம் போன்ற இன்னோரன்ன ஆடல் வடிவங்களும் அரங்கேற்றப்படவுள்ளன.

வடபகுதியின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை எடுத்துரைக்கின்ற ஒரு நல்ல நிகழ்வாக இந்த சுற்றுலாத் தினம் 2017 முன்னெடுக்கப்படவிருக்கின்றதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு