கலந்துரையாடலை புறக்கணிக்கத் தீர்மானம்

பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவுடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிக்க இலங்கை வைத்திய சபை தீர்மானித்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி அந்தக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வைத்திய சபை இணக்கம் தெரிவிக்காத சில விடயங்களைகூட இணங்கியுள்ளதாக, குறித்த குழுவினர் அறிக்கை வெளியிட்டமையே இதற்குக் காணரமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் வைத்திய சபை கூடிக் கலந்துரையாடும் வரை, சம்பந்தப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதிருக்க நேற்று இடம்பெற்ற வைத்திய சபையின் முகாமைத்துவ குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலுக்காக, இலங்கை வைத்திய சபை, சட்டமா அதிபர் திணைக்களம், உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறு இருப்பினும், வைத்திய சபை தனது முடிவு குறித்து, ஹர்ஷ டி சில்வாவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக அச்சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு