சதிகாரர்கள் தேர்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் – மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சி, அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நல்லாட்சியின் சதிகாரர்கள் ஒன்றாக இணைந்து, தினம் குறிக்கப்படாது மாகாண சபை தேர்தலை பிற்போடுவது தொடர்பாக தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தாமல் தற்போதுள்ள மாகாண சபைகளின் காலஎல்லையை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தவே முதலில் அவர்கள் முற்பட்டதாகவும், எனினும், அதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் தெரிவித்தமையால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு