நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க இடமளிக்க முடியாது

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்காதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்த இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் உப தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்து அந்த முறையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு