அனுமதியின்றி வாகன இறக்குமதி – விசாரணைகள் ஆரம்பம்

அனுமதியின்றி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தொடர்பாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதிருக்கின்ற சட்ட விதிகளுக்கு மாறாக 30 சொகுசு கார்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி அமைச்சர அல்லது பிரதியமைச்சரின் ஆலோசனைப்படியே வழங்க முடியும் என்ற போதிலும், இது தொடர்பில் உரிய அமைச்சர்களிடம் ஆலோசனைப் பெறப்படவில்லை என்பதால், குறித்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கு அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு