200ற்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

ஈராக் இராணுவத்திற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல்களில் 200க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் இராணுவம் உறுதிசெய்துள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பலம் படிப்படியாக தளர்ந்து வருகின்ற நிலையில், ஈராக்கின் சலாகுதீன் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 200க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சலாகுதீன் என்று அழைக்கப்படும் குறித்த மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த 480 சதுர கிலோமீற்றர் பரப்புடைய நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ள அதேவேளை, கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான தாக்குதல்களை ஈராக் இராணுவம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு