சுகாதாரத் தொண்டர்கள் காதர் மஸ்தானுடன் சந்திப்பு

வவுனியாவில் கடந்த 118 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐந்து சுகாதாரத் தொண்டர்கள் அடங்கிய குழு கலந்துகொண்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளித்து தமது நியமனம் தொடர்பில் கேட்டறிவதற்காக பல மணிநேரமாக காத்திருந்த போதிலும், அவர்களை சந்திக்காது அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கிருந்து சென்றிருந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமது நிரந்தர நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பிலும் இதனால் எதிர்நோக்கிவரும் சிரமங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாண சுகாதார அமைச்சருடன் தொடர்பினை ஏற்படுத்தி இந்த விடயம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அதிலுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் கேட்டறியப்பட்டன. அத்துடன், துரிதகதியில் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சுகாதாரத் தொண்டர்களிடம் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு