இன்று விஷேட பாராளுமன்ற அமர்வு

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட பாராளுமன்ற அமர்வு கூடியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான மூன்று சட்டமூலங்கள் மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதற்கமைய, மாநகர சபை கட்டளைச் சட்டம், நகரசபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேசசபை கட்டளைச் சட்டம் என்பவை இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இன்று மூன்று சட்டமூலங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

குறித்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்த முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு