மயிலிட்டியில் வெடிகுண்டுகள் மீட்பு

காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து விமானங்களை தாக்கும் 5,700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு