போதைப்பொருள் தொடர்பில் 52,000 பேர் கைது

நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், சுங்கத் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவல்களுக்கமைய, போதைப்பொருள் தொடர்பான 52,157 சம்பவங்களுடன் 52,072 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா போதைப்பொருள் தொடர்பான 32,673 சம்பவங்கள் தொடர்பில் 32,463 பேரும், ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான 19,434 சம்பவங்கள் தொடரபில் 19,237 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4,000 கிலோ கஞ்சாவும், 290 கிலோ ஹெரோயினும் இந்த சுற்றி வளைப்புகளின்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 220 கிலோ கொக்கேய்ன், 3 கிலோ ஹஷிஸ், 770 மில்லிகிராம் ஒபி முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, நைஜீரியா, மாலைதீவுகள் மற்றும் லட்வியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 27 பேரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு