18 வயதிற்குக் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை

18 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் பெற்றோர் உட்பட மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளதுடன், அதிகரித்து வரும் இப்படியான வாகன விபத்துக்களை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு