விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் புதிய கருத்து

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் பலவற்றை விடுவிக்கவும் பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள பாடசாலைகள், ஆலயங்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல் விகாரைகள் சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அநேகமான காணிகளை விடுவித்துக்கொள்ள முடியுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு