வடக்குக் கிழக்கில் இராணுவம் அகற்றுவது நல்லதல்ல

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது உசிதமானதல்லவென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஒரு இலட்சத்து 80 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனரென வடமாகாண முதலமைச்சர் கூறியதாக இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளித்த அவர், இராணுவத்தின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் பொய்யுரைக்கத் தேவையில்லை. வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்தின்படியே வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அவர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருப்பது சாதாரணமானது என்றும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் சிங்கள, பௌத்த மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதன் விளக்கம் முதலமைச்சருக்கு கிடைத்திருக்குமெனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பாடுகின்ற போதிலும், இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டியதேவை இருப்பின், அது குறித்த வெளிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு