அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அமைச்சர்களின் பங்கேற்பு அவசியம்

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கட்டாயம் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பொருளாதார பேரவையின் இரண்டாவது சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், மாவட்டங்களில் தத்தமது அமைச்சுக்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பிராந்திய அரசியல் தலைவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அமைச்சர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயற்பாடுகள், ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்த அமைச்சுக்களின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா நுகர்வோர் அதிகார சபைக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் வலியுறுத்தியதுடன், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, மேலும் செயற்திறனுடனும் பலமான முறையிலும் அதனை அமுல்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான தயார்படுத்தல்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு