கொரிய தீபகற்பத்தில் போர்ச் சூழல்

வடகொரிய எல்லையில் ரஷ்ய இராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது.

ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள ஹஸன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் சாவோ ஜியோனாராமலைப் பகுதியிலும் ரஷ்ய இராணுவம் கடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழல் காரணமாக தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவமே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆயுதங்களுடன் ரஷ்யா வடகொரிய எல்லையில் இராணுவத்தை குவித்து வருவது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒருபோதும் பார்த்துக்கொண்டு வெறுமனே இருந்து விடாது எனவும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு