கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையம் திறப்பு

கிளிநொச்சி விஷேட பொருளாதார மத்திய நிலையம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு ஜனாதிபதியால் எதிர்வரும் 14ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், முப்படைகள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து அமைச்சர் ஹரிசன் விஷேட பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு