எரிபொருட்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் தீர்மானமில்லை

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையிலும் எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லையென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இந்திய எரிபொருள் நிறுவனம் ஐ.ஓ.சி நிறுவனம், எவ்விதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளதுடன், ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சமாந்தரமாக, இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனமும் நட்டத்தில் இயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனமும் தற்போதைய நிலையில் ஒரு லீற்றர் பெற்றோலில் 16 ரூபாய் நஷ்டமும், ஒரு லீற்றர் டீசலில் 06 ரூபாய் நஷ்டமும் அடைவதனால், இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனம், கடுமையான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் பெற்றுக்கொண்ட எரிபொருட்களுக்கான பணத்தைச் செலுத்தாமையால் இவ்வாறான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், கடந்த சில வருடங்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பெரலின் விலை பல்வேறு தருணங்களில் ஏற்ற இறக்கத்திலேயே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு