முஸ்லிம்கள் சிலரின் செயற்பாட்டிற்கு வெட்கப்படுகிறேன் – கிழக்கு முன்னாள் முதலமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிழக்கு மாகாண சபையில், முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுவதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவருடைய காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், ஒரு லீற்றர் பெற்றோல் கூட தனது தனிப்பட்ட தேவைக்காக, பாவிக்கவில்லை எனவும், எதனையும் தான் தனக்காக, செய்யவில்லை. சமூகத்துக்காகவே செய்திருந்த போதிலும், ஏன் தன்னை தொலைக்க வேண்டுமென சிலர் நினைக்கின்றார்களென தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்ணுக்கு என்ன செய்தோம் என்று கேட்கின்றார்கள். ஐந்நூறு மில்லியன் ரூபாய் அல்ல, மூவாயிரம் மில்லியன் ரூபாயை இந்த மண்ணுக்காக, செலவழித்துள்ளோம். அதனை தான் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. இதுவரைக்கும் தான் எந்தவித ஊழலும் செய்யவில்லை. ஊழல் செய்பவர்கள் எமக்கு பக்கத்திலும் இருக்க முடியாது. அதனால் தான் தாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.