65 ரூபாவுக்கு தேங்காய்

அரசாங்கத்திடம் கைவசம் இருக்கின்ற ஒருதொகுதி தேங்காய்கள், சந்தைக்கு இன்று (02) விடப்படுவதன் ஊடாக, தேங்காய் ஒன்றை 65 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியுமென தெங்கு உற்பத்திச் சபை அறிவித்துள்ளது.

சிறு தெங்கு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேங்காய்களே, இவ்வாறு சந்தைக்கு விடப்படவுள்ளதாக தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்ததுடன், நடமாடும் வண்டிகளை கொண்டு, விற்பனை செய்யப்படும் இந்த தேங்காய்கள், இனங்கண்டு கொள்ளக்கூடிய வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சதொச விற்பனை நிலையங்களிலும் குறைந்த விலையில் தேங்காய்களை இன்று(02) முதல் கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வரட்சியான வானிலை காரணமாக, தெங்கு உற்பத்தி, பாதிப்படைந்திருந்தமையால், நாட்டுக்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு