தாமரைக் கோபுரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

தாமரைக் கோபுரத்தின் செயற்றிட்ட பணிகளை நிறைவு செய்து, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி அரசாங்கத்திடம் அதனை கையளிக்குமாறு சீனாவின் நிர்மாண நிறுவனத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

70 வீத நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷெமால் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுர செயற்றிட்டத்திற்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளிபரப்பு கோபுரமாக பயன்படுத்துவதே இந்த செயற்றிட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அனைத்து ஒளி, ஒலிபரப்பு சேவைகளையும் ஒரே தரத்துடன் வழங்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்தபட்ச ஒலிபரப்புகளை மேற்கொள்ளும் 50 நிறுவனங்களுக்கும், தொலைத்தொடர்பு சேவைகளை மேற்கொள்ளும் 20 நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி சேவைகளை முன்னெடுக்கும் 50 நிறுவனங்களுக்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு தாமரைக் கோபுரத்தினூடாக எதிர்பார்க்கப்படுகிறது.

2015 மீற்றர் (705 அடி) மற்றும் 2019.8 மீற்றர் (721 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தில் முதலாவது மற்றும் இரண்டாம் மாடிகள் தொலைக்காட்சி, வானொலி ஒளி, ஒலிபரப்பிற்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு