தனிநாடு அமைக்க தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு

தமிழீழ தனிநாடு அமைக்க ஈழத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவை கையளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஜோக்கின் அலெக்சாண்டர் மசா மார்டெல்லி, துணைத் தலைவர்கள் மொயட் சேலா, அமீர் ரமடான், சல்வா திரிஸ்கரசிவ்லி, வாலண்டின் ஜெல்வெகர் மற்றும் ஆணையர் செய்ட் ராட் செய்ட் அல் ஹ_சேன் ஆகியோருக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் அம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் எனவும், ஆங்கிலேயர் வெளியேறிய பின்னர் தமிழர்கள் மீது சிங்களவர்கள் அடக்குமுறையை கையாண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு