கிழக்கு மாகாணத்தில் இடமாற்றங்களுக்கு அனுமதியில்லை – மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவோர் அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாமென மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடனான விஷேட சந்திப்பிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ, டிசெம்பர் 31ஆம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிமனையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம், ஜனவரி மாதம் வழமைபோல் நடைபெறுமென கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு