பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம்

பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குவதனால், மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை பயன்படுத்தி இயக்கும் நடவடிக்கையில் லுப்தான்சா, ஏர்பிரான்ஸ்-கே.எல்.எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டில் ஏர்பஸ் விமானம் பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் விமானமாக மாற்றப்பட்ட போதிலும், அது 02 பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.

இந்த விமானங்களை வியாபார ரீதியில் அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கையில் இங்கிலாந்தின் ஈ.சி.ஜெட் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இத்தகையை விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுவதுடன், பலத்த ஒலி வெளியாகாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு