சட்டமூலம் தொடர்பான இறுதி தீர்மானத்தை நாடாளுமன்றமே மேற்கொள்கிறது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலம் தொடர்பான இறுதி தீர்மானத்தை நாடாளுமன்றமே மேற்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சட்டமா அதிபரின் தீர்மானம் மற்றும் மொழிப்பெயர்ப்பு என்பவற்றில் ஏற்பட்ட தாமதமே இதற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

7.45க்கு கிடைக்கப்பெற்ற பிரதியை 7.56க்கு வாசிக்க முடிந்ததாகவும், 3ல் 2 பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலம், தாம் கையொப்பமிட்டதன் பின்னர் சட்டமாக அமுலாவதாகவும், இது தொடர்பில் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு