இளஞ்செழியன் மீதான தாக்குதல் வழக்கு; சந்தேக நபருக்கு தொடர் விளக்கமறியல்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 22ஆம் திகதி நல்லூரில் வைத்து இளஞ்செழியன் சென்ற வாகனத்தை மறித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு