புதுக்குடியிருப்பில் துப்பாக்கி தயாரித்தவர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் வசமிருந்து 10 துப்பாக்கிகள் 2000 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, இவர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு துப்பாக்கி விற்பனை செய்த ஒருவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு