சட்டவிரோதமாக சிகரெட்டுக்களைக் கொண்டு வந்த சீன யுவதி கைது

ஒருதொகை சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சீன யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் துபாயில் இருந்து குறித்த பெண் நாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, 176 சிகரெட் பைக்கற்றுக்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவற்றின் பெறுமதி, சுமார் ஒரு இலட்சத்து 76,000 ரூபா எனவும், இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பராகிரம பஸ்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு