அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

.தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் பொது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பின் அமைப்பாளர் வய. பிதா சக்திவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுகொண்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு