பசுமை நகரமாக மாறும் நாரஹேன்பிட்டிய

நாரஹேன்பிட்டியை பசுமை நகரமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்னாயக்க தெரிவித்துள்ளதுடன், தொழிலாளர்களுக்காக கொலன்னாவ பிரதேசத்தில் 04 தொகுதி வீட்டுத் திட்டங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறித்த வேலைத்திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா செலவிட மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அந்த திட்டத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பொரள்ளை மற்றும் தலவத்துகொட ஆகிய பிரதேசங்களை கேந்திரமாக வைத்து நடுத்தர வருமானமுடையவர்களுக்கான வீட்டுத் திட்டம் ஒன்றை நிர்மாணிக்கவும் நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

பொரள்ளை பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்காக 7.7 பில்லியன் ரூபாவும், தலவத்துகொட வீட்டுத் திட்டத்திற்காக 07 பில்லியன் ரூபாவும் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு