தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி

தேங்காய் உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, எதிர்வரும் இரண்டு மாதங்களில் தேங்காய் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் எனவும், தேங்காய் உற்பத்தி முக்கோண பிரதேசமாக கணிக்கப்பட்டுள்ள கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தைவிட இந்த வருட உற்பத்தி 20 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் எனவும், உள்ளூர் நுகர்வோருக்கு மட்டும் வருடாந்தம் 370 கோடி முதல் 390 கோடி தேங்காய் தேவைப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை உள்ளூர் தேவைகளுக்கே போதாமலுள்ள நிலையில், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தெங்கு பொருட்கள் காரணமாக, உள்ளூரில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஏற்றுமதிக்கான பதப்படுத்தப்படும் உலர் தேங்காய் தொழிற்சாலைகளை முன்னெடுத்துச் செல்வது நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது அமைந்துள்ளதாக இலங்கை உலர் தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு