கடல் அலைகளில் எரிசக்தி உற்பத்தி – இலங்கைக்கு உதவ பின்லாந்து இணக்கம்

கடல் அலைகள் ஊடாக, எரிசக்தியை உற்பத்தி செய்வது தொடர்பான தமது அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கவும், இலங்கையின் கடற்கரைப் பிரதேசத்தில் கடல் அலை எரிசக்தி உற்பத்திக்கு உதவி வழங்கவும் தயாராக உள்ளதாக பின்லாந்தின் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜோன் லியெலெயுன்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சூழவுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் ஆரம்ப ஆய்வுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. எதிர்வரும் வருடத்தில், இலங்கையில் கடல் அலை எரிசக்தியை உற்பத்தி செய்யும் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகின் நவீன புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி ஊடகமான கடல் அலை மூலமான சக்தி உற்பத்தி தொடர்பாக அறிந்து கொள்வதற்காக, பிரமதர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினர், பின்லாந்தின் ஹெல்சிங்கி நகர ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்துக்கு, திங்கட்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு