மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கை பின்னடைவைச் சந்திக்கும் – உலக வங்கி

இலங்கையில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலைகளால் நாட்டின் போட்டித்தன்மை மற்றும் ஆட்சி தொடர்பிலான முக்கியமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமென உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பில் உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியானது இந்த வருடம் குறைவடையவுள்ளதுடன், பொருளாதாரம் ஒப்பீட்டளவில் 0.2 சதவீதத்தால் அதிகரித்து, 4.6 சதவீதமாக பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிற போதிலும், இலங்கைத்தீவு பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிலையியல் தன்மைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருப்பதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு