யாழ். நகர் பகுதியில் மலேரியா நுளம்புகள்

தலைமன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையச் சூழலிலுள்ள 19 கிணறுகளில் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி க.நந்தகுமார் தெரிவித்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட நுளம்புகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது, ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற வகையைச் சேர்ந்த நுளம்புகளும் அதன் குடம்பிகளுமே அவையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவ்வாறான நுளம்புகள் மற்றும் குடம்பிகளை அழிக்கும் சிறப்பு வேலைத்திட்டத்திற்கமைய, நகரின் மத்தியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் சுற்றுவட்டத்திலுள்ள அத்தனை கிணறுகளும் உடனடியாக சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், இந்த வகை நுளம்புகள் காணப்படும் கிணறுகளில், பாவனையிலுள்ள கிணறுகளாயின் மீன் குஞ்சுகளும் பாவனையற்ற கிணறுகளாயின் மருந்துகளும் தெளிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு