உமையாள்புரத்தில் தொடர் விபத்து

கிளிநொச்சி ஏ-9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அதே பகுதியில் நேற்றைய தினம் சாரதியின் நித்திரையால் பாலத்துடன் மோதுண்டு சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பஸ் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படாமையாலேயே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்படாமையே இன்றைய விபத்துக்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு