இ.போ.ச.வில் இலவச பயணம்

வழக்கமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற பருவகாலச் சீட்டு (சீசன்) இருப்பவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியுமென போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுகின்ற அதுசொகுசு பஸ்களிலும் பயணிகள் பயணம் மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், புகையிரத சேவை நிறுத்தத்தால் பயணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு