யாழில் தொடரும் வாள்வெட்டு சம்பவங்கள்

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு