தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரானவர்களுடன் கைகோர்ப்போம்

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாகக் கலந்துரையாடும் போது தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் நாம் இணைவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வடக்குத் தமிழ்க் கட்சிகளுடனும் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும், பொதுவான சின்னமொன்றிலோ அல்லது கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டது போன்று முன்னணியாகவோ அல்லது வேறு சின்னங்களிலோ போட்டியிடுவது என்பது தொடர்பாக, முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், தமது கட்சி, பொதுவான கூட்டணியொன்றை அமைக்குமெனத் தெரிவித்த அவர், 200க்கும் மேற்பட்ட பிரதேச சபைகளைக் கைப்பற்ற முடியுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு