மானுஸ்தீவில் உயிரிழந்தவரின் சடலம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இலங்கை வருகிறது

மானுஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்ப்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரனது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த இளைஞரின் சடலம் இன்று கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ்தீவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற இவர், அவுஸ்திரேலிய அரசினால் மானுஸ்தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் 9,000 டொலரைச் செலுத்துமாறு கோரியிருந்ததாக மேற்படி இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் மேற்படி விடயம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, இளைஞனின் சடலத்தை அன்னாரது குடும்பத்திற்கு எவ்வித செலவுகளுமின்றி, உடனடியாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு