பாப்பரசரைச் சந்தித்தது இலங்கைக் குழு

இலங்கையில் இருந்து வத்திக்கான் சென்ற குழுவொன்று புனித பாப்பரசரை பிரான்ஸிஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு புனித பாப்பரசர் இலங்கைக்கு வருகை தருவதற்கான ஒழுங்கு ஏற்பாடுகளை இந்தக் குழுவினரே மேற்கொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் நல்லிணக்கத்திற்காக மக்கள் ஏங்கிக்கொண்டிருந்ததை தாம் அவதானித்ததாக பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள சகல மதத்தவர்களும் ஒற்றுமையாகவும் கலாசாரத்துடனும் செயற்பட்டதை தாம் அவதானித்ததாகவும் புனித பாப்பரசர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு