தமிழ் பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்ட தேசிய தமிழ் தின விழா

தேசிய தமிழ் தின நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

தேசிய தமிழ் தின நிகழ்வுகள் இன்று (14) யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. தேசிய தமிழ் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இந்த நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி;.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டமைப்பினைச் சேர்ந்த எவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று அரசியல் கைதிகள் கடந்த 20 நாட்களாக தமது வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றில் நடாத்துமாறு வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்று (13) வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்திற்கு ஜனாதிபதி எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காது வருகை தருவதை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண முதலமைச்சரை ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாமென சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைவாக, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு