தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் டுபாயிலிருந்து உடம்பில் மறைத்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 03 மில்லியன் ரூபா என்றும் சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு