அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் தீர்மானம்

அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு 05 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பண்டிகைக் காலத்தில் 500 விஷேட பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும், லங்கா சதொசவில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை இந்த விலைக்கழிவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சதொசவில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், தேங்காய் அதிகளவில் கிடைத்தால், நாடு முழுவதும் அதனை விநியோகிக்க முடியும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு