எல்லை தாண்டுபவர்களின் அபராதத் தொகை அதிகரிப்பு?

கடல் எல்லையை மீறும் வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை 150 மில்லியன் ரூபாக அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ள போதிலும், இலங்கை, இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் தற்போது புதுடெல்லி நகரில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடலுக்கு அமைய இது தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் புதுடெல்லி நகரில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை – இந்திய கடல் எல்லை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு