ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இடம்பெறவுள்ள விஷேட சந்திப்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளதுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் உட்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கடந்த பொது தேர்தலில் போட்டியிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்க கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான திகதி இதுவரையில் விடுக்கப்படவில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு